இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக பெறும் இலங்கைஇந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் 500 மில்லியன் அமெரிக்க டொலரை 1 சதவீத வட்டி விகிதத்தில் கடனாக பெற இலங்கை முடிவு செய்துள்ளது.

இந்திய அரசாங்கத்திடம் இருந்து நேரடியாக கடனாக இது பெறப்படும் என்று நிதி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நெத் ஊடகத்திற்கு கூறினார்.

இந்த ஒப்பந்தம் எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கைக்கு கிடைக்கப்பெறுவதுடன், அதனை 25 ஆம் திகதி அமைச்சரவையில் முன்வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எரிபொருள் வாங்குவதற்காகவே இந்தியாவிலிருந்து இந்த கடன் பெறப்படுவதாகவும் தெரியவந்தது.

hey