இன்று வானிலையில் ஏற்படும் மாற்றம் – மழை பெய்யும் இடங்களின் விபரம்



இன்று வானிலையில் ஏற்படும் மாற்றம்

இலங்கையின் இன்றைய வானிலையில், மேல் , சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யும்.

வட மாகாணத்தில் காலையில் ஒரு சில மணி நேரம் மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எதிர்வுக்கூறியுள்ளது. ஏனைய இடங்களில் சாதாரண வானிலை நிலவும்.

மத்திய மலைகளின் மேற்கு சரிவு, வடக்கு, வட- மத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் காற்றின் வேகம் மணிக்கு 40 கிமீ வரை அதிகரிக்கலாம் என்றும் வானிலை மையம் எதிர்வுக்கூறியுள்ளது.

hey