சினிமா பிரியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – திரையரங்குகள் திறக்க அனுமதி25 வீதமான பார்வையாளர்களுடன்எதிர்வரும் 21ம் திகதி முதல் திரையரங்குகளை திறக்க முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் இரு வாரங்களுக்கு மக்கள் செயற்படும் விதம் தொடர்பான சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டது.இந்த வழிகாட்டுதலிலேயே திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சுகாதர வழிகாட்டலில், உள்ளக அரங்குகளில் திருமண நிகழ்வுகளை 50 பேருடன் நடத்துமாறும், வெளியக பகுதிகளில் 75 பேருடன் நடத்துமாறும் அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொவிட் அல்லாத மரண வீடொன்றில் அதிகபட்சம் 20 பேர் இருக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

hey