அட மணிக்கட்டு ரேகையிலும் இத்தன விஷயம் இருக்கா? இத்தனை நாள் இது தெரியாமப் போச்சே..!பொதுவாகவே உள்ளங்கையைப் பிடித்து ஜோதிடம் பார்ப்பார்கள் என்பது நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் மணிக்கட்டைப் பிடித்தும் ஜோதிடம் பார்க்கலாம். நம் மணிக்கட்டில் இருக்கும் ரேகையை வைத்தும் ஆயுள், ஆரோக்கியம், வாழ்க்கை, தொழில் ஆகியவற்றை அறியமுடியும்.நம்முடைய கையையும், உள்ளங்கையையும் இணைக்கும் பிரேஸ்லெட் லைன்ஸ் எனப்படும் இடத்திலேயே இந்த ரேகையைப் பார்க்க வேண்டும். இதில் அரிதாக சிலருக்கு 4 வரி இருக்கும். இதில் ஒரு வரி இருந்தால் அவரது ஆயுட்காலம் 25 முதல் 35 ஆண்டுகள். 2 வரிகள் இருந்தால் அவரது ஆயுட்காலம் 45 முதல் 57 ஆக இருக்கும். 3 வரிகளோ அதற்கு மேலோ இருந்தால் அவரது ஆயுள் மினிமம் 85 வருடங்கள். இதில் முதல்வரி ஆரோக்கியத்தை குறிக்கும். இது தெளிவாக இருந்தால் நாம் ஆரோக்கியத்துடன் இருப்போம்.

முதல் வரி ஆணுக்கு நெளிவு, சுளிவாக இருந்தால் அவர் சிறுநீர், புரோஸ்டேட், இனப்பெருக்க குறைபாடுடன் இருப்பார். பெண்ணுக்கு இதேபோல் இருந்தால் மகளிர் நலன் சார்ந்த பிரச்னை வரும். இவர்களுக்கு கருத்தரிப்பில் சிக்கலும், மாதவிடாய் தள்ளிப்போகுதலும் வரும். செகண்ட் வரி தெளிவாக இருந்தால் செல்வம், செழிப்பு தேடி வரும்

மூன்றாவது வரி நம் தொழிலைக் குறிக்கும். அந்த வரி தெளிவாக இருந்தால் செய் தொழிலில் ஏற்றம் கான்பார். முதல் வரி தடித்தும், இரண்டு, மூன்றாவது வரி சற்று மெல்லிதாகவும் இருந்தால் அவர் குழந்தைப் பருவத்தில் செழிப்பாகவும், வளர, வளர கொஞ்சம் பின் தங்கி கடைசியில் மீண்டு எழுபவராக இருப்பார்.

நான்காவது வரி இருந்தால் தொழில் இன்னும் சிறக்கும். நான்காவது வரி இருப்பவர்கள் வெளிநாட்டு வேலைக்குச் செல்வதில் கவனம் தேவை. அதனால் இறப்பு ஏற்படும் அபாயமும் உண்டு. இதே கையில் கொக்கி போல் இருந்தால் ஆளுமைத்திறனோடு இருப்பார். சங்கிலித் தொடர் போல் இருந்தால் லைபில் போராட்டம் அதிகம் இருக்கும் எனவும் அர்த்தம்.

hey