மியூசிக்கிற்கு இணையாக ஏற்ப பாடி அசத்தும் கிளி.. இதுவரை இப்படியொரு ஒரு குரலை இதுவரை கேட்டிருக்க மாட்டீங்க..!



பொதுவாகவே கிளி நன்றாகப் பேசும் என்பது நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் இங்கே ஒரு கிளி இசைக்கு ஏற்ப பாடி அசத்துகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.கிளியை பிடிக்காதவர்களே இருக்க முடியாது. அதன் கூர்மையான மூக்கும், அழகும் பார்த்தவுடனே ரசிக்கும்படியாக இருக்கும். அதனால் தான் பெண்களைக் கூட கிளியோடு ஒப்பிட்டுச் சொல்வார்கள். இன்னும் சொன்னால் கல்யாணத்துக்கு வரன் தேடும்போதுகூட பொண்ணு கிளி மாதிரி இருக்கவேண்டும் என சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறோம்

நாய், பூனை என ஏராளமான செல்லப்பிராணிகள் இருந்தாலும் அவற்றில் இல்லாத ஒரு தன்மை கிளிகளுக்கு உண்டு. அதுதான் அவற்றின் பேசும் குணம். மிக, மிக அழகாக கிளி பேசுவதால் நாமும் அதைக் கேட்டுக்கொண்டிருந்தால் அழுப்பே தட்டாது. கிளிகளைப் பொறுத்தவரை அவை மனிதர்களோடு மிகவும் நெருக்கமாக வாழும் பிராணிதான்.

இங்கேயும் அப்படித்தான். வெளிநாட்டுக்காரர் ஒருவர் பாசமாக ஒரு கிளி வளர்க்கிறார். அவர் தீவிரமான இசைப்பிரியர். அவரிடமே வளர்ந்ததால் அந்தக் கிளியும் இசையின் மீது அலாதி ப்ரியம் கொண்டதாகி விட்டது.

இந்நிலையில் அந்த வெளிநாட்டுக்காரர் வயலின் இசைக்கிறார். அந்த இசைக்கு ஏற்ப கிளி மிக அழகாக பாடல் பாடுகிறது. தன் கீச்சு..கீச்சு குரலால். இதோ கிளியின் அழகிய பாடலை இதோ நீங்களே கேளுங்கள். வீடியொ இதோ..

hey