உடம்பை குறைக்க குஷ்பு வெளியிட்ட ரகசிய டிப்ஸ்…குண்டு பப்ளிஸ் கட்டாயம் படியுங்கதமிழ்த்திரையுலகில் தனக்கென மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் படையை கொண்ட நடிகைகளில் குறிப்பிடத்தக்கவர் குஷ்பு. இவரது கணவர் சுந்தர்.சி பிரபலமான திரைப்பட இயக்குனர்.தமிழ் நடிகைகளில் குஷ்பு ரசிகர்களின் இதயசிம்மாசனத்தில் அமர்ந்தவர். அதனால் அவருக்கு கோயிலே கட்டினார்கள் அவரது ரசிகர்கள். 1980களில் குழந்தை நட்சத்திரமாக பயணத்தைத் துவங்கிய குஷ்பு, 1990களில் முன்னணி நடிகையாக வலம்வந்தார். இவருக்கு அவந்திகா, அனந்திகா என இருமகள்கள் உள்ளனர்.

நடிகை குஷ்பு முதலில் திமுக கட்சியில் இருந்தார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். சமீபத்தில் அங்கிருந்தும் வெளியேறி பாஜகவில் இணைந்தார். எப்போதும் சோசியல் மீடியாவிலும் நடிகை குஷ்பு செம ஆக்டீவாக இருப்பார். அடிக்கடி தன் புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் இப்போது நடிகை குஷ்பு தன் சமீபத்திய புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில் மிகவும் ஒல்லியாகி நச்சென இருக்கிறார் நடிகை குஷ்பு. குறித்த இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிகம் பேர் கமெண்ட் செய்துவந்தனர்.

பழைய சினிமாக்களில் நாம் பார்த்த குஷ்புவைப் போலவே இதில் நச்சென இருக்கிறார் குஷ்பு. இவர் எப்படி உடம்பை இப்படிக் குறைத்தார் என பலரும் குழம்பிவந்த நிலையில் தான் எப்படி உடம்பைக் குறைத்தேன் என குஷ்புவே ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘நடைபயிற்சி தான் அதற்குக் காரணம். தொடர்ந்து நடந்தால் நம் உடல் நிலை நன்றாக இருக்கும். உடல் எடையும் குறையும்.’ என நடந்துகொண்டே தான் உடல் மெலிந்த காரணத்தைச் சொல்லியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Kushboo Sundar (@khushsundar)

hey