தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வது குறித்து இராணுவ தளபதி வெளியிட்ட கருத்துகொவிட் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல முடியாது என உத்தரவு பிறப்பிக்கும் வகையிலான எந்தவொரு சுகாதார வழிகாட்டல்களும் வெளியிடப்படவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

எனினும், அவ்வாறான சட்டம் ஒன்று கொண்டுவரப்படும் என தாம் சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்திருந்ததாகவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், இந்த விடயம் குறித்து எதிர்வரும் காலங்களில் ஆராயப்படும் என இராணுவ தளபதி குறிப்பிட்டார்.

இதேவேளை, 30 வயதுக்கு மேற்பட்ட சிலரை தவிர, பெரும்பாலானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியாது என்ற எண்ணத்தைக் கொண்ட சிலர் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொது இடங்களுக்கு செல்லும் போது, தடுப்பூசி செலுத்தியமைக்கான அட்டையை சோதனை செய்யும் தீர்மானம் இதுவரை எட்டப்படவில்லை என கூறிய அவர், தேவை ஏற்படும் பட்சத்தில் அவ்வாறான தீர்மானத்தை எட்டுவது குறித்து ஆராயப்படும் எனவும் தெரிவித்தார்.

hey