பால் மா உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு!பால் மா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரிப்பது குறித்து தீர்மானிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பால் மா, சமையல் எரிவாயு, கோதுமை மா மற்றும் சீமெந்து ஆகிய பொருட்களுக்கான விலையை அதிகரிப்பதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய அமைச்சரவையில் இந்தப் பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

இதேவேளை, கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் அத்தியாவசிய பொருட்களை விடுவிப்பதற்கு மத்திய வங்கியின் ஊடாக நிதி வழங்குவதற்கு அமைச்சரவை இன்று தீர்மானித்துள்ளது.

hey