கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 56000 கடவுச்சீட்டு விநியோகம்கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 56406 பேர் புதிய கடவுச்சீட்டுகளை பெற்றுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜூலை மாதத்தில் மாத்திரம் 27,326 பேர் கடவுச்சீட்டு பெற்றுள்ளனர். அந்த மாதத்தில், 26 இராஜதந்திர கடவுச்சீட்டுகள் மற்றும் 57 அதிகாரப்பூர்வ கடவுச்சீட்டுக்களும் வெளியிடப்பட்டுள்ளன.

ஒகஸ்ட் மாதத்தில், 28,903 புதிய கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. 44 அதிகாரப்பூர்வ கடவுச்சீட்டுகள் மற்றும் 50 புதிய இராஜதந்திர கடவுச்சீட்டுகள் அனைத்து நாடுகளுக்கும் வழங்கப்பட்டன.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒகஸ்ட் மாதம் வரை, குடிவரவு மற்றும் குடிவரவுத் திணைக்களத்தால் 161,820 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.. 625 அதிகாரப்பூர்வ கடவுச்சீட்டுகளும் மற்றும் 220 இராஜதந்திர கடவுச்சீட்டுகளும் அனைத்து நாடுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் அனைத்து நாடுகளுக்காகவும் 204081 கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

hey