இலங்கைக்கு கிடைத்த மற்றுமொரு தங்கப்பதக்கம்ஜப்பானில் யமகட்டா நகரில் நடைபெற்ற All Japan senior and Master Gymnast போட்டித் தொடரில் இலங்கைக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

குறித்த போட்டியில் இலங்கை சார்பில் மில்கா கிஹானி டி சில்வா கலந்துகொண்டு பதக்கத்தை வென்றுள்ளார்.

புலமைப்பரிசில் ஒன்றின் அடிப்படையில் ஜப்பானில் தங்கியிருந்து ‘ஜிம்னாஸ்டிக்’ பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த மில்கா, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்றிருந்தார்.

இலங்கை சார்பாக ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதலாவது ஜிம்னாஸ்டிக் வீராங்கனை என்ற பெருமையும் இவரையே சாரும்

hey