இலங்கையில் 50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி?எதிர்வரும் காலத்தில் 50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த வேண்டி ஏற்படும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உயிரணு உயிரியல் பிரிவு பேராசிரியர் நீலிகா மாலவிகே தெரிவித்தார்.

சினோபார்ம் தடுப்பூசி செலுத்திக் கொண்ட இளம் வயதினருக்கு பூஸ்டர் தடுப்பூசி தேவைப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் 50 வயதிற்கு குறைந்தவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி செலுத்த வேண்டியது இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் சினோபார்ம் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் 67% பேருக்கு பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

hey