வடக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியது தாழமுக்கம்! வலுவடையும் என எச்சரிக்கைவடக்கு வங்காள விரிகுடாவில் ஒரு தாழமுக்கம் வட அகலாங்கு 18.4N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 90.4E இற்கும் இடையில் மையம் கொண்டுள்ளது.

இத் தொகுதியானது அடுத்த 12 மணித்தியாலங்களில் ஆழமான தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் வட அகலாங்குகள் 16.0N – 20.0N இற்கும் கிழக்கு நெடுங்கோடுகள் 85.0E – 95.0E இற்கும் இடைப்பட்ட கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இதேவேளை, இயங்குநிலை தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலை காரணமாக நாட்டின்தென்மேற்கு பகுதியில் மழையுடனான வானிலையில்அதிகரிப்புஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

hey