நாடு திறந்த பின்னர் எவ்வாறு செயற்பட வேண்டும்? இராணுவ தளபதி விளக்கம்நாடு திறக்கப்பட்டதன் பின்னர் புத்தாண்டு காலப்பகுதியில் செயற்பட்டதனை போன்று செயற்பட வேண்டாம் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவ்வாறு பொறுப்பற்ற முறையில் செயற்பட்டால் கொவிட் அலை மீண்டும் ஏற்படுவதனை தவிர்க்க முடியாமல் போய்விடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு திறக்கப்பட்டதன் பின்னர் குறைந்தபட்சம் இரண்டு மாதங்களாகும் வரை சுகாதார சட்டத்தை கடுமையாக பின்பற்ற வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் நாட்டை திறப்பது தொடர்பில் தனக்கு சில ஆலோசனைகள் வழங்குவார். கொவிட் தொற்று மகிழ்ச்சிகரமான நிலைமையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் கொவிட் பரவல் எதிர்வரும் இரண்டு மூன்று மாதங்களில் மேலும் குறையும் என எதிர்பார்க்க முடியும். கொவிட் தொற்றாளர்களை வீடுகளில் பார்த்துக் கொள்ளும் வேலைத்திட்டம் மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மிகவும் வெற்றிகரமாக கொவிட் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு அடு மிகபெரிய உதவியாக இருந்தது. நாட்டை திறப்பதற்கான சுகாதார வழிமுறைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

நாட்டில் 51 வீதமானோர் கொவிட் தொற்றிற்கு எதிராக இராண்டாவது தடுப்பூசிகளை பெற்றுள்ளனர். ஏனையவர்களுக்கும் விரைவில் தடுப்பூசி வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

hey