வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகை தருபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது அரசாங்கம்.

இதன்படி வெளிநாடுகளில் இருந்து வருகை தருபவர்களிடம் மேற்கொள்ளப்படும் பிசிஆர் சோதனை முடிவுகள் 3 மணித்தியாலங்களில் வழங்கப்படவுள்ளது.

அந்தவகையில் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் பிசிஆர் சோதனை ஆய்வுகூடமானது இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் செயற்பாடு எதிர்வரும் சனிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatungas) தெரிவித்துள்ளார்.

hey