இலங்கை முழுவதும் ஆ யுதம் ஏந்திய ப டையினர் – வெளியானது விசேட அறிவிப்புநாடு முழுவதும் ஆ யுதம் ஏந்திய ப டையினரை கடமைகளில் ஈடுபடுத்தும் வகையிலான விசேட அறிப்பொன்று இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் (Gotabaya Rajapaksa) வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இந்த அறிவிப்பை இலங்கை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வின் போது வாசித்துள்ளார்.

பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது சரத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், இந்த கட்டளையை பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் கூறியிருந்தார்.

பொது மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் இதேபோன்றதொரு உத்தரவானது ஒரு மாதத்திற்கு முன்னர் பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

hey