வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக வெளியான அறிவிப்புவாகனங்களின் இயந்திரத்துக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய் மற்றும் உதிரிப் பாகங்களின் விலை அதிகரித்துள்ளதாக வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகன தொழில்நுட்பவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வாகனங்களின் இயந்திரங்களுக்கு(எஞ்ஜின்) பயன்படுத்தப்படும் இறக்குமதி செய்யப்பட்ட மசகு எண்ணெய் மற்றும் வாகனங்களின் உதிரிப் பாகங்களின் விலை நூற்றுக்கு 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளமையால் பாரிய சிரமத்துக்குள்ளாகி இருப்பதாக வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகன தொழில் நுட்பவிய லாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு லிற்றர் மசகு எண்ணெய் 7200 ரூபாவாக இறக்குமதி செய்யப்பட்டது என்றும் தற்போது 8600 ரூபாவாக அதிகரித்துள்ளது என்றும் இந்த நிலைமையால் வாகன உரிமையாளர்கள் பலர் தங்கள் வாகனங்களைப் பழுது பார்ப்பதில் தாமதப்படுத்துகிறார்கள் என வாகன தொழில் நுட்பவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சந்தையில் கிடைக்கும் வாகன உதிரிப் பாகங்களுக்கு உரிமையாளர்களின் வரம்புக்கு அப்பாற்பட்ட விலையை உயர்த்தியுள்ளதாகவும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய உதிரிப்பாகங்களின் விலை உயர்ந்துள்ளதாக வாகனத் தொழில் நுட்பவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

hey