நாட்டின் பல பகுதிகளில் ஒரே நாளில் பியருக்கு தட்டுப்பாடுநாட்டின் பல பகுதிகளில் ஒரே நாளில் பியருக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அறிய முடிகின்றது.நாடு முழுவதும் கடந்த மாதம் 20ம் திகதி முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில், நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகள் மூடப்பட்டிருந்தன.

இவ்வாறான நிலையில், மதுபானசாலைகளை நேற்று (17) முதல் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

அனுமதி வழங்கப்பட்டு ஓரிரு நிமிடங்களிலேயே, நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளில் மது பிரியர்கள் மிக நீண்ட வரிசைகளில் காத்திருந்து மதுபான கொள்வனவில் ஈடுபட்டதை நேற்றைய தினம் அவதானிக்க முடிந்தது.

இந்த நிலையில்,(18) மதுபானசாலைகளுக்கு சென்று, பியர் கொள்வனவு செய்ய முயற்சித்த பலர் ஏமாற்றத்துடன் திரும்பியதாக அறிய முடிகின்றது.

ஒரு சில வகை பியர்களை தவிர, ஏனைய அனைத்து விதமான பியர்களும் நேற்றைய தினம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மதுபானசாலை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளுக்கு வழமை போன்று இன்று அல்லது நாளைய தினமே பியர் விநியோகிக்கப்படும் என அந்த வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

hey