கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகாலை வேளையில் சிக்கிய இளைஞன்கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று அதிகாலை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் மாரவில பகுதியைச் சேர்ந்த 24 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலியான கடவுச்சீட்டு மற்றும் இத்தாலி குடியுரிமை விசா ஆகியவற்றுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த இளைஞர் போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இத்தாலி செல்ல முயன்ற போதே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

hey