வவுனியாவில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற லங்கா ரிப்போட் இணையத்தள ஊடகவியலாளர் இரவீந்திரரஞ்சன் லிவிராஜ் மீது தா க்குதல்வவுனியாவில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற லங்கா ரிப்போட் இணையத்தள ஊடகவியலாளர் இரவீந்திரரஞ்சன் லிவிராஜ் மீது தா க்குதல் நடத்தப்பட்டுள்ளது

இந்த தாக்குதல் சம்பவம் புளியங்குளம் பகுதியில் இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றதாக தா க்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக குறித்த ஒரு அரசியல் கட்சியினால் புளியங்குளம் பகுதியில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது காணாமல் ஆக்கப்பட்டோர் அவ்விடத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் அவ்விடத்தில் கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மீது அரசியல் கட்சி ஆதரவாளர்கள் தா க்குதல் நடத்த முற்பட்டனர்.

அதன் போது செய்தி சேகரிக்கச் சென்ற இணையத்தள ஊடகவியலாளர் இரவீந்திரரஞ்சன் லிவிராஜ் மீது நடத்தப்பட்டதுடன் அவரிடம் இருந்த கமரா உள்ளிட்ட சில பொருட்களையும் அபகரித்துச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிஸாரிடம் குறித்த ஊடகவியலாளர் முறைப்பாடு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

hey