அதிக விலையில் பிசிஆர் பரிசோதனை செய்யப்படுகின்றதா? அதிகாரிகளுக்கு ஜனாதிபதி போட்ட உத்தரவுவெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்களுக்கான பிசிஆர் பரிசோதனைகளின் போதும் அவர்களுக்கான தனிமைப்படுத்தல் வசதிகளை வழங்கும்போதும் அதற்கென பெருமளவு பணம் அறவிடப்படுகின்றமை தொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அறிவுறுத்தியுள்ளார்.

எந்தவொரு விடயத்திலேனும் தவறுகள் இடம்பெறுவது குறித்து யாரேனும் சுட்டிக்காட்டினால், அவற்றை உடனடியாகத் திருத்திக் கொள்வதில் அரசாங்கம் ஒருபோதும் பின்னிற்கப் போவதில்லை என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மற்றும் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கைகள் தொடர்பான தரவுகள் ஒருபோதும் திட்டமிட்ட வகையில் மாற்றப்படவில்லை.

அவ்வாறு மாற்றப்படுகின்றன என எவரேனும் கூறினால், அதனைப் பகிரங்கமாக வெளிப்படுத்துங்கள் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல சவால் விடுத்துள்ளார்.

பேராதனை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர்களுடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்ட அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, அதனைத்தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

hey