நீர்க்கட்டணம் தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்தாமதிக்காமல் நீர்க் கட்டணத்தை செலுத்துமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.கோவிட் பரவல் காரணமாக பாவனையாளர்கள் நீர் கட்டணங்கள் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் பரவல் நிலைமை காரணமாக நாளாந்தம் பாவிக்கப்படும் நீரின் அளவும் அதிகரித்துள்ளதாகவும்,தாமதிக்காமல் நீர்க் கட்டணத்தை செலுத்துமாறும் அந்த சபை அறிவித்துள்ளது.

இந்த கட்டணங்களை செலுத்துவதற்கான கைப்பேசி செயலி மற்றும் ஒன்லைன் முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், நிதி நிறுவனங்கள் மற்றும் நீர் வழங்கல் சபையில்

இந்த கட்டணத்தை செலுத்துவதற்கான வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

hey