Lankareport உரிமையாளரும் அவருடன் வேலை செய்த ஊடகவியலாளரும் கைது



Lankareport உரிமையாளரும் அவருடன் வேலை செய்த ஊடகவியலாளரும் 21.01.2020 அன்று கைது செய்யப்பட்டனர். அதன் பின் ஊடகவியலாளர் லிவிராஜ் என்பவரை சில தினங்களில் விடுதலை செய்தனர்.

ஆனால் அவருடன் கைது செய்யப்பட்ட lankareport உரிமையாளர் கிருபன் என்பவர் இன்று வரை விடுதலை செய்யப்படவும் இல்லை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவும் இல்லை. இந்த கைது நடவடிக்கையானது சட்டத்தின் பிரகாரம் நடைபெற்றதாக இல்லை.

கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்படாத கிருபன் இப்போது உயிருடன் உள்ளாரா இல்லையா என்பது கூட இன்றுவரை அவரின் குடும்பத்தினருக்கு தெரியவில்லை. அவருடன் வேலை செய்த ஊடகவியலாளர் லிவிராஜ் விடுதலையின் பின் இராணுவம் மற்றும் பொலிஸாரின் தொடர் அச்சுறுத்தல் மற்றும் நெருக்கடியால் தலைமறைவானார்.

இவரின் தலைமறைவின் பின் இவரின் குடும்பத்தினரை வீட்டுச் சிறையில் வைத்ததைப்போல் அவர்களின் தேசிய அடையாள அட்டைகளை வாங்கிக் கொண்டு எங்கும் சென்று வர முடியாமல் தடுத்து வைத்துள்ளனர். இதனை எல்லாம் சீராக ஆராய்ந்த எமது ஊடக அமையம் வவுனியா மாவட்ட புலனாய்வுப் பிரிவினரிடம் வினவிய போது தாங்கள் யாரையும் கைது செய்யவும் இல்லை அப்படி யாரரையும் கைது செய்ததாக எமது பதிவேட்டிலும் இல்லை.

இங்கே நடப்பதை பார்க்கும் போது சட்டம் சரியாக இயங்கவில்லை என்பதும் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதும் உண்மையே… ஆனால் வெளி உலகிற்கு இலங்கை அரசு தாங்கள் சரியாக இருப்பதாகவே காண்பிக்கின்றது.

hey