எதிர்வரும் காலங்களில் நெல்லின் விலை அதிகரிக்கக் கூடும்எதிர்வரும் காலங்களில் நெல்லின் விலையை அதிகரிக்க எதிர்பார்ப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், கோடிக்கணக்கில் லாபம் ஈட்டும் நெல் ஆலை உரிமையாளர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டாம் என்று விவசாயிகளை வலியுறுத்தினார்.

இருப்பினும், அரிசி வியாபாரிகளிடம் இருந்து அரிசி கையிருப்புகளை கட்டுப்பாட்டு விலையில் கொள்முதல் செய்வதால், தமது விளைச்சல்களை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

நாடு நெல் கிலோவுக்கு அதிகபட்சமாக 50 ரூபா மற்றும் சம்பா நெல்லுக்கு 52 ரூபா என அரசாங்கம் அதிகபட்ச விலையை நிர்ணயித்தமையே இதற்கு காரணம் என விவசாயிகள் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

hey