தனிமைப்படுத்தல் ஊரடங்கு நேரத்தில் வழங்கப்பட்டுள்ள அனுமதி – இராணுவத் தளபதி அறிவிப்புதனிமைப்படுத்தல் ஊரடங்கு நேரத்திலும் சகல பொருளாதார மத்திய நிலையங்களையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை தேசிய கோவிட் தடுப்புச் செயலணியின் தலைவரான இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

போயா தினத்தைத் தவிர ஏனைய அனைத்து தினங்களிலும் சகல பொருளாதார மத்திய நிலையங்களையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

hey