முழுமையாக கோவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களுக்கும் டெல்டா திரிபினால் பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கைமுழுமையாக கோவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களுக்கும் டெல்டா திரிபினால் பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இலங்கை மருத்துவ ஒன்றியத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு கோவிட் தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டவர்களில் சிலருக்கும் டெல்டா திரிபு ஏற்பட்டு கடுமையாக நோய்வாய்ப்படக் கூடும் எனவும், மரணம் கூட ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சினோபார்ம் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களில் 7 வீதமானவர்களுக்கு மட்டும் நோய் எதிர்ப்பு சக்தி முழுமையாக ஏற்படவில்லை என ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும், புற்று நோய், சிறுநீரக நோய் உள்ளிட்ட நாட்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த தடுப்பூசி ஏற்றினாலும் பூரண நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதில்லை என இலங்கை மருத்துவ ஒன்றியத்தின் தலைவர் டொக்டர் பத்மா குணரட்ன தெரிவித்துள்ளார்.

hey