நாட்டில் தற்போது பரவிவரும் கொவிட் வைரஸ் நிலைமையினால், பாதிக்கப்பட்டுள்ள வறுமை கோட்டின் கீழுள்ள மக்களுக்கு இலவச டெக்ஸி சேவைநாட்டில் தற்போது பரவிவரும் கொவிட் வைரஸ் நிலைமையினால், பாதிக்கப்பட்டுள்ள வறுமை கோட்டின் கீழுள்ள மக்களுக்கு உதவி கரம் நீட்டும் வகையில், இலவச டெக்ஸி சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வெல்லஸ்ஸ மனிதாபிமான சமூக உதவி நிதியத்தினால் இந்த டெக்ஸி சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.இந்த சேவையானது, வெல்லவாய முதல் மொனராகலை மாவட்டம் முழுவதும் சேவையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட், ஏனைய நோய்களினால் பாதிக்கப்படுவோர், கர்ப்பணித் தாய்மார்கள், வயோதிபர்கள் ஆகியோரை வைத்தியசாலைக்கு அழைத்து செல்வதற்காக, சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இந்த டெக்ஸி சேவையை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக அந்த நிதியத்தின் ஸ்தாபகரும், வெல்லவாய பிரதேச சபை உறுப்பினருமான யூ.எஸ்.பீ.பண்டார தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு உதவித் திட்டத்தின் கீழ், இந்த டெக்ஸி சேவை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.0552280008, 0768701088, 0762806888 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்துவதன் ஊடாக, இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

hey