இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்பரவிவரும் கொரோனா வைரஸ் திரிபினால் ஏற்படும் அச்சுறுத்தல் காரணமாக இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதனை தவிர்க்குமாறு சீ.டி.சி எனப்படும் அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது.அந்த கட்டுப்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை, ஜமேய்க்கா, ப்ரூனே ஆகிய நாடுகள் கொரோனா அச்சுறுத்தல் அதிகம் உள்ள 4 ஆம் கட்ட அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த நாடுகளுக்கு சுற்றுலா மேற்கொள்வதனை தவிர்க்குமாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இலங்கைக்கு அத்தியாவசியமாக பயணம் மேற்கொள்ள வேண்டியிருப்பின் அதற்கு முன்னதாக இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன் முகக்கவசம் அணிதல், 6 அடி சமூக இடைவெளி மற்றும் இலங்கை சுகாதாரத்துறையின் வழிகாட்டுதல்களை உரிய வகையில் பின்பற்றுதல் அவசியம் எனவும் அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்று தடுப்பு மையம் அறிவுறுத்தியுள்ளது.

hey