திருடிய நாயை, 7500 ரூபாவிற்கு அடகு வைத்த இருவர் கைதுபலாங்கொடை பகுதியிலுள்ள வீடொன்றில் வளர்த்த Labrador வளர்ப்பு நாயொன்றை திருடி, அதனை 7500 ரூபாவிற்கு அடகு வைத்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேகநபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.பலாங்கொடை – கிரிமெட்டிதென்ன பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீடொன்றிலுள்ள நாயொன்றை குறித்த இரண்டு சந்தேகநபர்களும் திருடி, அதனை மற்றுமொரு நபருக்கு 7500 ரூபாவிற்கு அடகு வைத்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக, திருடப்பட்ட நாயை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

hey