முதல் தடுப்பூசி பெற்றதன் பின்னர், கொவிட் வைரஸ் தொற்றினால்? – 2வது தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியுமா?கொவிட் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக நாட்டில் தற்போது மிக வேகமாக தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதை காண முடிகின்றது.

சுகாதார அமைச்சு மாத்திரமன்றி, இராணுவத்தினரும் மிக வேகமாக தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொவிட் தடுப்புக்காக உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்திக் கொள்வதற்கு, அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து விதமான தடுப்பூசிகளிலும் இரண்டு மருந்தளவை (DOSE) பெற்றுக் கொள்வது அத்தியாவசியமானது என சுகாதார தரப்பினர் அறிவித்துள்ளனர்.

தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டாலும், கொவிட் வைரஸ் தொற்றும் அபாயம் தொடர்ந்தும் காணப்படும் என சுகாதார பிரிவு கூறுகின்றது.எனினும், தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள், மரணிக்கும் விதம் குறைவடையும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்வாறான நிலையில், கொவிட் தடுப்பூசியின் ஒரு மருந்தளவை (DOSE) மாத்திரம் பெற்றுக்கொண்ட நிலையில், அவர்களுக்கு கொவிட் வைரஸ் தொற்றுமாக இருந்தால், இரண்டாவது மருந்தளவை (DOSE) பெற்றுக்கொள்ள முடியுமா? என்ற கேள்வி பலரது மத்தியில் தற்போது எழுந்துள்ளது.

இவ்வாறு முதலாவது மருந்தளவை (DOSE) பெற்றுக்கொண்ட நிலையில், கொவிட் வைரஸ் தொற்றுமாக இருந்தால், இரண்டாவது மருந்தளவை (DOSE) பெற்றுக்கொள்ள முடியும் என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், கொவிட் வைரஸ் தொற்றி, ஒரு மாத காலம் நிறைவடைந்ததன் பின்னரே, முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்ட நபர், தனது இரண்டாவது தடுப்பூசியின் மருந்தளவை (DOSE) பெற்றுக்கொள்ள முடியும் என வைத்திய நிபுணர்கள் கூறுகின்றனர்.

hey