நாட்டில் கர்ப்பிணித் தாய்மாருக்கு அவசர அறிவிப்பு



நாட்டில் கர்ப்பிணித் தாய்மார்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகின்றமை அதிகரித்துள்ளதாக குடும்பநல சுகாதார பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா கூறியுள்ளார்.

இதனால் கர்ப்பிணி தாய்மார்கள் உடனடியாக கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்

கர்ப்பிணித் தாயொருவர் கொரோனா தொற்றுக்குள்ளானால் சாதாரண நபரொருவர் தொற்றுக்குள்ளாவது போலன்றி அதிக சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக கர்ப்பிணித் தாய்மார்கள் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கப்படுவது முக்கியம். அவர்கள் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா, தெரிவித்துள்ளார்.

hey