“18 வயதுக்கு குறைவான சிறார்களுக்கு தடுப்பூசி விண்ணப்பம்” – உண்மை என்ன..? சுகாதார அமைச்சின் அவசர அறிவிப்பு18 வயதுக்கு குறைவான சிறார்களுக்கு கொவிட் தடுப்பூசி

18 வயதுக்கு குறைவான சிறார்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்படுவதற்கான தகவல்களை உள்ளடக்குமாறு கோரி, சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் விண்ணப்பப்பத்திரம் போலியானது என சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

இந்த விண்ணப்பப் பத்திரம், சுகாதார அமைச்சினாலோ அல்லது சுகாதார அமைச்சுடன் தொடர்புடைய நிறுவனங்களினாலோ வெளியிடப்பட்டது அல்லவெனவும் அவர் கூறுகின்றார்.

அதனால், இணையத்தளத்தில் பகிரப்படும் விண்ணப்பப் பத்திரத்தை நிரப்ப வேண்டாம் என சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் டொக்டர் ரஞ்ஜித் பட்டுவத்துடாவ, பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்

hey