அரிசி மற்றும் சீனி ஆகியவற்றுக்கான ஆகக்கூடிய விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவிப்புஅரிசி மற்றும் சீனி ஆகியவற்றுக்கான ஆகக்கூடிய விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஓய்வூப் பெற்ற மேஜர் ஜெனரல் ஷாந்த திஸாநாயக்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று (02) முதல் அமுலுக்குவரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் மொத்த விலை 116 ருபாவாகவும், ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் சில்லறை விலை 122 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி பெக்கட்டின் விலை 125 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு நிற சீனி ஒரு கிலோகிராமின் ஆகக்கூடிய சில்லறை விலை 125 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு கிலோகிராம் பெக்கட் சிவப்பு நிற சீனியின் விலை 128 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரிசியின் விலை (கிலோகிராமில்)

01. வெள்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசி :− 95.00 02.வெள்ளை மற்றும் சிவப்பு நாட்டு அரிசி :− 98.00 03.வெள்ளை மற்றும் சிவப்பு பச்சை சம்பா :- 103.00 04.கீரி சம்பா :- 125.00

hey