இந்த வருட இறுதிக்குள் நாட்டில் ஏற்படப்போகும் மாற்றம் : விரைவில் முடிவடையும்நாட்டில் கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக வேகமாக இடம்பெற்று வருவதனால் எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதி வாரத்தில் தொற்றுப் பரவல் முழுமையாக குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு-ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் கோவிட் பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக உயர்ந்துள்ளது.

இதனால் கடந்த மாதம் 20ம் திகதி முதல் நாட்டில் தனிமைப்படுத்த ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டு மக்களும் பொருளாதார ரீதியில் சிரமங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைவாக்கப்பட்டுள்ள நிலையில், நாடு இயல்பு நிலைக்கு திரும்பக்கூடும் என சுகாதார தரப்பினர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இது நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் செய்தியாக அமைந்துள்ளதாக சுகாதார தரப்பினர்கள் மேலும் கூறியுள்ளனர்.

இதேவேளை, தென்னாபிரிக்காவின் புதிய கோவிட் மாறுபாடு எந்த நேரத்திலும் இலங்கைக்குள் நுழையலாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் எச்சிரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

hey