இலங்கையை மிரட்டும் மற்றுமொரு புதிய ஆபத்தான வைரஸ்தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய புதிய கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகளை ஏமாற்றி, ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு மிக விரைவாக பரவுகிறது என்று தெரியவந்துள்ளது.

சி .1.2 என்ற இந்த வைரஸ் தென்னாப்பிரிக்கா உட்பட பல நாடுகளில் பரவி உள்ளது.முன்னர் ஏற்பட்ட பல பிறழ்வுகளிலும் இந்த வைரஸ் மிகவும் சக்திவாய்ந்த விகாரமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.

இதுவரை பெயரிடப்படாத இந்த வைரஸ் தற்போது சீனா, நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து, பிரிட்டன், போர்ச்சுகல், காங்கோ போன்ற நாடுகளில் பரவியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பேராசிரியர் சன்ன ஜயசுமனவின் கூற்றுப்படி, இந்த வகை வைரஸ் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை உடைக்கும் ஆற்றல் கொண்டதாக விஞ்ஞானிகள் காட்டியுள்ளனர்.

இருப்பினும், வைரஸ் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார்.

hey