கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் கஞ்சா! பயன்படுத்த சட்ட ரீதியாக அங்கீகரியுங்கள் – கோட்டாபயவுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம்கஞ்சா பயன்பாட்டை சட்ட ரீதியாக

கொரோனாவில் இருந்து சுய பாதுகாப்பு பெறவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளவும் கஞ்சா பயன்பாட்டை சட்ட ரீதியாக அங்கீகரிக்குமாறு இலங்கை சமூக ஜனநாயகக் கட்சியின் செயலாளர் துசித்த பாலசூரிய கோரியுள்ளார்.

இது தொடர்பில் அரசாங்கத்திடம் மற்றும் ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பில் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம்,

உலகம் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளவென கஞ்சா பயன்டுத்தப்படு வரும் நிலையில் இலங்கை பிரஜைகளுக்கு கஞ்சா பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளமை கவலையளிக்கின்றது.

வயது வந்தவர்களுக்கு மாத்திரம் என்ற நிபந்தனையின் அடிப்படையிலாவது கஞ்சாவை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட வேண்டும்.அது இலங்கை பிரஜைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ஆயுர்வேத வைத்திய துறையை முன்னேற்றவும் எடுக்கப்படும் புரட்சிகர தீர்மானமாக அமையும்.

கொரோனா தொற்று ஏற்படும் நபர்கள் நியூமோனியா நிலையினால் உயிரிழப்பதாகவும் கஞ்சா பயன்படுத்துவதன் மூலம் நியூமோனியா நிலைக்கு செல்லாமல் தப்பிக்க முடியும் எனவும் உலகில் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அக்கடிதத்மில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அமெரிக்காவில் சில மாநிலங்களில் தடுப்பூசி பெற்றுக் கொள்ளும் நபர்களுக்கு இலவசமாக கஞ்சா பொதியும் வழங்கப்படுவதாக இலங்கை சமூக ஜனநாயகக் கட்சியின் செயலாளர் துசித்த பாலசூரிய ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

hey