நாட்டு மக்களுக்கு முக்கிய தகவலை அறிவித்தார் இராணுவ தளபதிகொவிட் தடுப்பூசிகளை தங்களுக்கு சொந்தமாக கிராம சேவகர் பிரிவில் அல்லது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் மாத்திரம் பெற்றுக் கொள்ளுமாறு இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அந்த அதிகாரி பிரதேசங்களில் பொதுமான அளவில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் தங்களுக்கான அதிகார பிரதேசங்களில் மாத்திரம் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறு அவர் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தடுப்பூசி நிலையங்கள் பலவற்றில் அண்மையில் பாரிய சிக்கல் நிலைமைகள் ஏற்பட்ட நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் 30 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு மாத்திரம் கொழும்பு விகாரமஹாதேவி பூங்கா மற்றும் தியத உயனவில் நிறுவப்பட்டுள்ள தடுப்பூசி நிலையங்களில் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும் என இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

hey