மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியாகிய தகவல்மாகாணங்களுக்கிடையிலான அத்தியாவசிய சேவை

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலிலுள்ள காலத்தில் மாகாணங்களுக்கிடையிலான அத்தியாவசிய சேவைக்காக வழங்கப்பட்ட போக்குவரத்து அனுமதிப்பத்திரம் பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்குவது இடை நிறுத்தப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீசன் தெரிவித்தார்.

பொது மக்கள் மாகாணங்களுக்கிடையிலான அத்தியாவசிய தேவைகளுக்காக பயணிக்கும் பொழுது அத்தியாவசிய தேவைக்கான உரிய ஆவணங்களைசோதனைச் சாவடிகளில் சமர்ப்பித்து அவற்றை நிரூபித்து பயணங்களை தடையின்றி தொடர முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியினால் இதற்கான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

hey