கர்ப்பிணி தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளல் தொடர்பில் வெளியாகிய முக்கிய அறிவித்தல்



கர்ப்பிணிகள் தமது கர்ப்ப காலத்தில் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதன்

கர்ப்பிணிகள் தமது கர்ப்ப காலத்தில் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதன் மூலம் அவர்களுக்கு மாத்திரமின்றி , பிறக்கவிருக்கும் சிசுவுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கப்பெறும் என்று டி சொய்சா மகளிர் வைத்தியசாலையின் பிறந்த குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவின் விசேட வைத்திய நிபுணர் அமில பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வழங்கப்படுகின்ற சைனோபார்ம் , அஸ்ட்ராஜெனெகா, பைசர் மற்றும் மொடர்னா ஆகிய எந்த தடுப்பூசியானாலும் அதனை கர்ப்ப காலத்தில் பெற்றுக் கொள்வது பாதுகாப்பானதாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,அமெரிக்காவில் தடுப்பூசி பெற்றுக்கொண்ட கர்ப்பிணியொருவரின் பிறந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதை மேற்கோள் காட்டி இதனைத் தெரிவித்துள்ளார்.

hey