கடந்த ஆறு மாதங்களில் ஒரு நாள் கூட வேலைக்குச் செல்லாத ஏராளமான ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் அரச ஊழியர்கள் : வெளியாகியுள்ள தகவல்கடந்த ஆறு மாதங்களில் ஒரு நாள் கூட வேலைக்குச் செல்லாத ஏராளமான ஆசிரியர்கள்

கடந்த ஆறு மாதங்களில் ஒரு நாள் கூட வேலைக்குச் செல்லாத ஏராளமான ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் அரச ஊழியர்கள் இருப்பதை பொது நிர்வாக அமைச்சகம் வெளிப்படுத்தியுள்ளது.

எனினும், அவர்கள் அனைவருக்கும் செலுத்த வேண்டிய சம்பளம் வழங்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில நிர்வாகிகள் கடமைக்காக அறிக்கை அளித்து போக்குவரத்து மற்றும் எரிபொருள் கொடுப்பனவுகளைப் பெற்றுள்ளனர். அவர்கள் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் மட்டுமே பணியிடத்தில் இருந்திருக்கிறார்கள்.

இதனிடையே கோவிட் பெரும் தொற்று காரணமாக, சில தனியார் நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு சம்பளம் வழங்குவதை மட்டுப்படுத்தியுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு அடிப்படை அல்லது ஓரளவு சம்பளத்தை மட்டுமே வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

hey