நாட்டு மக்களுக்கு சீனியின் விலை தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்திஅடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஒரு கிலோ சீனி 125 ரூபா என்ற விலையில் நுகர்வோருக்கு வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,“எதிர்வரும் வாரங்களில் சீனியின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் 125 ரூபாவிற்கு குறைவான விலையில், சீனியை வழங்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.

தற்போது சீனிக்கு கட்டுப்பாட்டு விலை இல்லை. உலக சந்தையில் உள்ள போக்குகளையும் நாம் பார்க்க வேண்டும். உலகச் சந்தையிலும் சீனியில் விலை உயர்ந்து வருகிறது” என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, தற்போது ஒரு கிலோ சீனி 200 ரூபாவிற்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

hey