வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு மிக முக்கிய அறிவிப்புவெளிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்லவுள்ளோர் விரைவாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் தங்களை பதிவு செய்து தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்லவுள்ளோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி ஏற்றப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் மங்கள ரன்தெனிய தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் காணப்படும் தடுப்பூசிக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவேற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

இலங்கை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் இவர்களுக்கான தடுப்பூசி ஏற்றல் செயற்பாடு நாரஹென்பிட்டியிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, குறிப்பிட்ட தடுப்பூசியை மாத்திரமே பணியாளர்கள் ஏற்றியிருக்க வேண்டும் என எந்தவொரு நாடும் இதுவரை அறிவிக்கவில்லை என வெளிநாநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் தெரிவித்தார்.

அதற்கமைய, Pfizer, AstraZeneca, Moderna மற்றும் Sinopharm ஆகிய தடுப்பூசிகளை வெளிநாடுகள் அங்கீகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

hey