புகைப்பிடிப்பவர்களின் பிள்ளைக்கு கோவிட் தொற்றால் ஏற்படும் பெரும் ஆபத்துபுகைப்பிடிக்கும் பழக்கமுடைய பெற்றோரின் பிள்ளைகள் கோவிட் காரணமாக மரணிக்க கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் நிபுணத்துவ சிறுவர் நல மருத்துவர் தீபால் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

புகைப்பிடிக்கும் பழக்குமடைய பெற்றோரின் பிள்ளைகளுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டால் அவர்கள் இறக்கக்கூடிய அபாயம் காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புகைப் பிடிப்பவர்களுக்கு அருகாமையில் இருப்பவர்களுக்கு நுரையீரல் பாதிப்புக்கள் ஏற்படும் எனவும் இவ்வாறானவர்களுக்கு திசு ஒட்சிசன் பற்றாக்குறை(hypoxia) மற்றும் சுவாசப் பிரச்சினைகள் ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோவிட் பெருந்தொற்று நிலவும் காலத்தில் புகைப்பிடித்தல் சிறார்களின் உடல் நலத்தில் நேரடித் தாக்கம் ஏற்படுத்துவதனை புரிந்து கொண்டு செயற்பட வேண்டுமென எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, புகைப்பிடித்தல் மற்றும் மதுபானம் அருந்துதல் என்பன பெருந்தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை வலுவிழக்கச் செய்கின்றது என மருத்துவ நிபுணர்கள் அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

hey