இலங்கையில் 200 குழந்தைகளுக்கு ஆபத்து! 4 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சுமார் 200 குழந்தைகள் தற்போது கொழும்பு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என வைத்தியர் J. விஜேசூரிய தெரிவித்தார்.

அவர்களில் 4 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் குறிப்பிட்டார்.குழந்தைகளிடையே கொரோனா தொற்று எண்ணிக்கையில் சிறிது அதிகரிப்பு உள்ளது.

இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க இன்று (26) மற்றொரு வார்டு ஒதுக்கப்பட்டுள்ளதுஇது மருத்துவமனையின் 8 வது வார்ட் ஆகும்.

குழந்தைகள் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது, மற்ற நோயுற்ற குழந்தைகளுக்கு அதிகபட்சமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது என டாக்டர் தீபால் பெரேரா மேலும் கூறினார்.

hey