10000 ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொருட்கள் இம்முறை யார் யாருக்கு கிடைக்கும் தெரியுமா..? வெளியாகிய தகவல்நாட்டிற்குள் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக,

நாட்டிற்குள் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, தனிமைப்படுத்தப்படும் குடும்பங்களுக்காக வழங்கப்படும் 10,000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியை, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாத்திரம் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த தீர்மானத்தை அமைச்சரவை எட்டியுள்ளதாக பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணியினால் வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுக்கு இந்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

hey