ஊரடங்கு காலப்பகுதியில் நாட்டு மக்களின் நடவடிக்கை குறித்து இராணுவத்தளபதி வெளியிட்டுள்ள தகவல்நாட்டில் கோவிட் தொற்று தீவிரமடைந்ததன் காரணமாக கடந்த 20ஆம் திகதி இரவு பத்து மணி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி அதிகாலை வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு காலப்பகுதியில் மக்களின் நடத்தை திருப்திகரமாக இருந்ததாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனவே, மக்கள் வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவிப்பதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மக்கள் முகக்கவசத்தை அணிந்து, சுகாதார வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றினால் கோவிட் தொற்றில் இருந்து நாட்டை பாதுகாப்பது கடினமாக அமையாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

hey