நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில் நாள் ஒன்றிற்கு இத்தனை கோடி நட்டமா..? வெளியாகிய அதிர்ச்சி தகவல்இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் அரசாங்கத்திற்கு நாளாந்தம் 1500 கோடி ரூபாய் நட்டம் ஏற்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக முடிந்த அளவு விரைவில் முடக்க நிலையை குறைத்துக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதனை போன்ற நிலைமை ஏற்பட்டால் நாட்டின் அபிவிருத்தி வேகத்திற்கும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தாக்கங்களும் ஏற்படும்.

நாட்டை முடுவதனால் ஏற்படும் நட்டத்தை குறைத்துக் கொள்ள எங்களால் முடிந்த அளவு வேகமாக நாட்டை வழமைக்கு கொண்டுவர வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

hey