நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்ட காலப்பகுதியில் வெளியில் செல்பவர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்புநாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள

நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்ட காலப்பகுதியில் பொலிஸ் ஊடாக ஊரடங்கு அனுமதி பத்திரம் விநியோகிக்கப்படமாட்டது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கு அமைய அத்தியாவசிய சேவைகளுக்கு செல்பவர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி தங்களது அடையாள அட்டை அல்லது நிறுவன பிரதானிகளால் வழங்கப்படும் கடிதங்களை சோதனை நடவடிக்கையில் ஈடுபடுகின்ற பொலிஸாரிடம் காண்பிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

hey