தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கு கொரோனா பரவுமா? வெளியாகிய தகவல்தடுப்பூசி இரண்டையும் பெற்றுக் கொண்டவர்களின் உடம்பில் கொரோனா வைரஸ் பரவும் தன்மை 65 வீதத்தால் குறைவாகும்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோய் எதிர்ப்பு உயிரியல் சார்ந்த ஆய்வு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவாந்தர மேற்கொண்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

88 மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்த அவர், அவற்றில் 84 டெல்டா வகை தொடர்புடைய மரபணு பகுப்பாய்வாக அடையாளம் காணப்பட்டிருப்பதாக கூறினார்.

கொழும்பு , மஹரகம ,மாலபே, வவுனியா ,இரத்தினபுரி, கம்பஹா, கண்டி, நுவரெலியா ஆகிய பிரதேசங்களில் இவர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

hey