இல்லத்தரசிகளுக்கு ஊரடங்கு நேரத்தில் மகிழ்ச்சியான தகவலை அறிவித்த அரசுதற்போதைய ஊரடங்கு காலத்தில் எந்த எரிவாயு

தற்போதைய ஊரடங்கு காலத்தில் எந்த எரிவாயு தட்டுப்பாட்டுக்கும் அனுமதிக்கப்படாது என்று இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஏற்பட்டுள்ள எரிவாயு பற்றாக்குறையை அடுத்து நாட்டில் உள்ள எரிவாயு இருப்பு குறித்து விசாரிக்க கேரளவாபிட்டிய லிட்ரோ எரிவாயு முனையத்தில் ஆய்வு மேற்கொண்ட போது இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்த போதிலும், மக்களுக்கு சுமை ஏதுமின்றி நிவாரணம் வழங்கி லிட்ரோ எரிவாயுவை முந்தைய விலையில் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டில் போதுமான அளவு எரிவாயு கையிருப்பு கிடைப்பதால், அது சந்தைக்கு அதிகபட்ச திறனில் எரிவாயுவை வழங்கும் என்று அவர் கூறினார்.

hey