நாட்டில் மாகாண எல்லைகளை கடந்து செல்பவர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை : மீறினால் இதுதான் நடக்குமாம்பேருந்துகளில் மாகாண எல்லைகளை அடைந்த பின்னர்

பேருந்துகளில் மாகாண எல்லைகளை அடைந்த பின்னர் பிற மாகாணங்களுக்கு நடந்து செல்லும் நபர்களை கைது செய்ய சிறப்பு பொலிஸ் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.சட்டத்தை மீறுபவர்கள், அதை ஆதரிக்கும் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

பொது போக்குவரத்து சேவைகள் அல்லது அத்தியாவசிய சேவைகளைத் தவிர வேறு யாரும் மாகாண எல்லைகளை கடக்க முடியாது என்று அவர் மேலும் கூறினார்.

அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய மாகாண எல்லைகளில் சிறப்பு பொலிஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன, சாலை தடுப்புகள் மற்றும் பாலங்கள் அனைத்தையும் உள்ளடக்கும் வகையில் பொலிஸ் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.கொழும்பு ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார்.

hey